என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மூதாட்டி கொலை"
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டைபுதூரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி அருக்காணி (வயது 70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.
அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த 10-ந் தேதி அவரது கணவர் முத்துசாமி தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் அருக்காணி மட்டும் இருந்தார். 11-ந் தேதி காலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை, வாய், மூக்கு பகுதியில் காயம் இருந்தது.
கட்டிலில் பிணமாக கிடந்த அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்த சென்றிருப்பது தெரியவந்தது. தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையாளியை பிடிக்க கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், பெருந்துறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் துரைசாமி ஆகி யோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர். கொலையுண்ட அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபுரம் என்ற இடத்தில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் குப்பம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (54) என்பவர் தனது மகன் நவீன்குமாருடன் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
போலீசாரிடம் மாரிமுத்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாரிமுத்துவிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.
அப்போது மூதாட்டி அருக்காணியை கொலை செய்ததாக மாரிமுத்து ஒப் புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயியான மாரிமுத்துவுக்கு 1½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலங்களுக்கு மருந்து அடிக்கும் தொழிலையும் மாரிமுத்து செய்து வந்தார்.
தொழில் செலவுக்காக கடனுக்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் வாங்கி உள்ளாராம். இந்த நிலையில் அவருக்கு மேலும் பணம் தேவைப்பட்டு உள்ளது. எனவே கடந்த 10-ந் தேதி இரவு அருக்காணியின் வீட்டுக்கு மாரிமுத்து சென்றார்.
அங்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் கேட்டார். ஆனால் பணம் கொடுக்க அருக்காணி மறுத்துள்ளார். ‘‘ஏற்கனவே வாங்கிய பணத்தை கொடு. அப்போதுதான் மீண்டும் பணம் தருவேன்’’ என்று அருக்காணி கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாரி முத்து அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து அருக்காணியை தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அருக்காணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிக் கொடி) பறித்துக் கொண்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அருக்காணியின் தாலிக் கொடியில் 4 பவுன் தாலிச் செயினை வங்கியில் மாரிமுத்து அடமானம் வைத்து ரூ. 65 ஆயிரம் பெற்றுள்ளார். தாலியை வீட்டில் வைத்திருந்தார். இந்த தகவல் அறிந்த போலீசார் தாலியையும், தாலிச்செயினையும் கைப்பற்றினர்.
மூதாட்டி கொலை வழக்கில் கைதாகியுள்ள மாரிமுத்துவுக்கு செல்வி (46) என்ற மனைவியும், நவீன்குமார் என்ற மகனும், மகாலட்சுமி (28), ஆனந்தி (21) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
மகள்களுக்கு திருமணமா கிவிட்டது. நவீன்குமார் சித்தோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டை புதூரை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி அருக்காணி (வயது 70).
இவர்களுக்கு திலகவதி (49), செல்வி (40) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. திலகவதி கரூரிலும், செல்வி சுமைதாங்கி புதூரிலும் வசிக்கிறார்கள்.
செல்வியின் கணவர் இறந்துவிட்டார். எனவே செல்வி வீட்டில் முத்துசாமி தங்கி உள்ளார். சம்பவத்தன்று அருக்காணியும் அங்கு சென்றிருந்தார். பின்னர் சம்மங்குட்டைபுதூருக்கு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் அருக்காணி பிணமாக கிடந்தார். கட்டிலில் கிடந்த அவரது வாய் பகுதியில் பலத்த காயம் இருந்தது. அதில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.
அவரை யாரோ அடித்து கொலை செய்துள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பெருந்துறை டி.எஸ்.பி., கொடுமுடி போலீஸ் இன்ஸ் பெக்டர் மணிகண்டன் ஆகி யோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்ததையும், அருக்காணி டி.வி. பார்த்ததையும் சிலர் பார்த்துள்ளனர்.
டி.வி. காலை 9 மணி வரை ஆப் செய்யப்படவில்லை. இதனால்தான் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது இரவு 10.30 மணிக்கு மேல்தான் யாரோ அருக்காணியை கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அருக்காணியின் வாய் பகுதியில் கொலையாளி தாக்கியுள்ளார். அந்த தாக்குதலால் அருக்காணியின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல பற்கள் உடைந்துள்ளன. இதனால் வாய் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.
முதலில் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருக்காணி ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக பேசியுள்ளனர். போலீசார் வந்து பார்த்த பின்னர்தான் வாய் பகுதியில் கொலையாளி தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.
அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தாராம். சமீபத்தில் 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். அதில் ரூ. 8 லட்சம் பணம் வந்தது. அதில் ரூ. 4 லட்சத்தை மகள்களுக்கு கொடுத்தனர். ரூ. 2 லட்சத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்ததாகவும், மீதி பணத்தை வட்டிக்கு கொடுத்ததாகவும் தெரிகிறது.
எனவே வட்டிக்கு பணம் பெற்றவர்களிடம் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை நடந்தபோது அருக்காணி சத்தமிட்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளி வாயில் தாக்கினாரா? அல்லது அருக்காணி யாரையாவது திட்டியதால் வாயில் தாக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
அருக்காணி நகை அணிந்திருந்ததாகவும் அந்த நகையை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.சிலர் அருக்காணி நகையை அவ்வப்போது கழற்றி வைத்துவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.
எனினும் அந்த நகைக்காக அருக்காணி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர், பாலிக்கடை மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். (வயது 65). ஆடு வியாபாரம் மற்றும் கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி(60). இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
நேற்று அதிகாலை வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமியை மர்மநபர்கள் தாக்கி, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த லட்சுமி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் நகைக்காக மூதாட்டி லட்சுமியை மர்ம நபர்கள் திட்டுமிட்டு கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதை பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-
கொலையுண்ட லட்சுமியின் கணவர் சின்னப்பையனுக்கு ஆடு வியாபாரம் மற்றும் கறிக்கடை தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமாக ஊரில் நிலமும் உள்ளது.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, சின்னப்பையன் வீட்டை அவர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.அதிகாலையில் சின்னப்பையன் ஆடுகள் வாங்க வெளியூர் சந்தைகளுக்கு செல்வது வழக்கம். இதை மர்ம நபர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.
அதுபோல் அவரது வீட்டில் யார்? யார்? உள்ளனர். அவர்கள் எங்கு வேலை பார்க்கிறார்கள். தற்போது வீட்டில் யாரெல்லாம் வசிக்கிறார்கள்? என்பதெல்லாம் கண்காணித்து தெரிந்து கொண்டு உள்ளனர்.
இதையடுத்துத்தான் நேற்று அதிகாலை சின்னப்பையன் வீட்டின் வெளியே மர்ம நபகள் பதுங்கி இருந்துள்ளனர்.
அதிகாலை 4.15 மணிக்கு சின்னப்பையன் ஆடு வாங்க கிருஷ்ணகிரி மாவட்டம் கொந்தாரப்பள்ளிக்கு புறப்பட்டார். அவரை லட்சுமி வழியனுப்பி விட்டு வராண்டாவில் உள்ள கட்டிலில் தூங்கினார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து லட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். அவர் சத்தம் போடவே, தலையில் பலமாக தாக்கினர். இதில் அவர் மயங்கி சுருண்டு விழுந்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்து விட்டதாக அவரது உறவினர்கள் நினைப்பார்கள் என்று கருதி லட்சுமியை கட்டிலில் போட்டு விட்டு, மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
காலை 6.15 மணிக்கு காபி கொடுக்க வந்த மருமகள் தனது மாமியார் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அவரை எழுப்பி பார்த்தார். ஆனால் எழுந்திருக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மருமகள், இது பற்றி கணவர், மாமனார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் அங்கு வந்து லட்சுமியை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக மாமாங்கம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது தலையில் பலமாக அடித்துள்ளதால், உள்காயம் ஏற்பட்டு சுய நினைவு இழந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் என்பது தெரியவந்தது.
ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 60). இவர் கடந்த 4-ந் தேதி இரவு வழக்கம் போல தேவலாபுரம் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மணியம்மாள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மறுநாள் இதனை பார்த்த பொதுமக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டுறவு சங்க கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குணசேகரன் (வயது 32) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. குணசேகரனுக்கு உறவினர்கள் யாரும் கிடையாது. அவரும், அதே ரேஷன் கடையில் தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று அங்கு தூங்கும்போது மணியம்மாளுக்கும், குணசேகரனுக்கும் தகராறு ஏற்பட்டு, அப்போது ஆத்திரத்தில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து குணசேகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நீண்டகாலமாக பிச்சை எடுத்து வந்தார்.
இரவில் அதே பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் முன்பு தங்குவார். நேற்றும் வழக்கம்போல் கோவில் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டி தலையில் கல்லைப் போட்டனர். இதில் அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் சாத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மூதாட்டி நீண்ட காலமாக பிச்சை எடுத்து வந்தாலும் அவரது பெயர், ஊர் விவரம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் அவரிடம் பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆம்பூர் அடுத்த உமராபாத் பழைய காலனியை சேர்ந்த ராமர் மனைவி மணியம்மாள் (வயது 60). ஆதரவற்ற நிலையில் இருந்த இவர் அங்குள்ள கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் தங்கி வந்தார்.
நேற்று இரவு கூட்டுறவு வளாகத்தில் ரேசன் கடை முன்பு படுத்து தூங்கினார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தனர்.
இன்று காலை ரத்த வெள்ளத்தில் மணியம்மாள் இறந்து கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர். இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர்கள் பாலசுப் பிரமணி, கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் சன்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.அது மூதாட்டி கொலையான இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. போலீசார் மணியம்மாள் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன இதன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
போளூர்:
சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்குமணியம்மாள் (வயது 65). இவர் தனது உறவினர் வெங்கடேசன், அவரது மருமகனும் கார் டிரைவருமான கஜேந்திரன் (35). மலேசியா உறவினர்கள் மேகான்குமார், சந்திரசேகர் ஆகிய 5 பேரும் கடந்த மே மாதம் 9ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த அத்திமூர் தம்புகொட்டான்பாறை அருகில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வந்தனர்.
அப்போது அவர்கள் குழந்தை கடத்த வந்தவர்கள் என தவறாக கருதி கிராம மக்கள் அவர்களை துரத்தி தாக்கினர்.
இதில் மூதாட்டி ருக்குமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். அவரிகளில் கார் டிரைவர் கஜேந்திரன் என்பவர் தொடர்ந்து கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 3 மாதமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன் நினைவு திரும்பாமலேயே நேற்று மாலை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போளுர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் சென்னைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 45 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பலரை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.
மேலும் சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தற்போது போளுர் போலீஸ்ஸ்டேசனில் தினமும் கையெழுத்து போட்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்து 3 மாதம் கடந்தும் இந்த வழக்கு தொடர்பாக இது வரை குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்யபடவில்லை. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 73 பேரையும் தேடிவருவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர், களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.
இதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த உறவினர்களான மோகன்குமார், சந்திரசேகரன், கஜேந்திரன், வெங்கடேசன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் இரவு பகலாக கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தி 62 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 44 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 18 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.
போலீசாருக்கு பயந்து தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, அண்ணாநகர், திண்டிவனம் உள்பட 10 கிராம மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்று தலைமறைவாகி விட்டனர்.
சிலவீடுகளில் பெண்கள் மட்டுமே இருந்தனர். கடைகள் திறக்கப்படவில்லை. விவசாய பணிகள் முடங்கியது. பஸ்கள் பயணிகள் இன்றி சென்றன. அந்த கிராமங்கள் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பில் இருந்தன.
தற்போது படிப்படியாக வெளியூர் சென்ற கிராம மக்கள் ஊர் திரும்பி வருகின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வி.என்.குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 80). இவரது கணவர் சுவாமிதாஸ் இறந்துவிட்டார். அவரது 3மகள்கள் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் சுப்புலட்சுமி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஆனந்தராஜின் மனைவி ஜெயக்கொடி என்பவருக்குமிடையே பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்துவந்தது. நேற்றுமாலை ஜெயக்கொடி தெருவில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மூதாட்டி சுப்புலட்சுமியும் தண்ணீர் பிடிக்க சென்றார். அந்த நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயக்கொடி தனது கணவர் ஆனந்தராஜிடம் (48) கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு வீட்டில் தனியாக இருந்த சுப்புலட்சுமியை அவர் தாக்கினாராம். பின்னர் அவரை அலேக்காக தூக்கிச் சென்று ஊருக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் வீசினார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் தலையில் அடிபட்டு சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ராதாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த சுப்புலட்சுமியின் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.
ஆனந்தராஜ் மீது ஏற்கனவே அவரது தந்தையை கொலை செய்த வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) மற்றும் அவரது மருமகன் கஜேந்திரன் (45) உள்பட உறவினர்கள் 5 பேர், கடந்த 9-ந் தேதி போளூர் தண்ணீர்பந்தலில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
போளூருக்கு முன்புள்ள தம்புகொட்டான் பாறை கிராமத்தில் காரை நிறுத்தி வழி கேட்டனர். அப்போது, குழந்தை கடத்தும் கும்பல் என தவறாக எண்ணி கிராம மக்கள் கத்தி கூச்சலிட்டனர். எதற்கு ‘வம்பு’ நின்று காரை எடுத்து கொண்டு புறப்பட்ட அவர்களின் காரை களியம் கிராமத்தில் மடக்கினர்.
காரில் இருந்த ருக்மணி உள்ளிட்ட 5 பேரையும் கீழே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கினர். காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் மூதாட்டி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கஜேந்திரன் உள்பட மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் அத்திமூர் மற்றும் களியம், தம்புகொட்டான் பாறை, கணேசபுரம், காமாட்சிபுரம், ஜம்பங்கிபுரம், இந்திராநகர், ஏரிக் கொல்லைமேடு, திண்டிவனம் உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த 117 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் 42 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கைது நடவடிக்கைக்கு பயந்து அத்திமூர், களியம் உள்ளிட்ட 11 கிராமங்களையும் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூருக்கு தப்பி ஓடி விட்டனர்.
இந்த நிலையில், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட 42 பேரில், 37 பேரின் காவல் முடிந்ததையடுத்து, இன்று போலீஸ் பாதுகாப்புடன் 37 பேரும் போளூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
37 பேரின் காவலையும், மேலும் 15 நாட்களுக்கு நீடித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 37 பேரும் மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
போளூர் அருகே குல தெய்வம் கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்துபவர்கள் எனக் கருதி கிராம மக்கள் தாக்கியதில் ருக்மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 62 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் 36 பேரை போளூர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அத்திமூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), பாபு (54), ரமேஷ் (36), ஏழுமலை (29), தின்டிவனத்தை சேர்ந்த சேகர் (43), தானியார் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (34). ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் ஊரை விட்டு தலைமறைவாகி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் பகுந்தனர். களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, தின்டிவனம் உள்ளிட்ட 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டனர். இதனால் அந்த கிராமங்கள் 7-வது நாளாக இன்றும் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் தலைமறைவாக உள்ள 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த கஜேந்திரன் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சுயநினைவு திரும்பாத நிலையில் இருந்து வந்தார். கார் மெக்கானிக் தொழில் செய்து வந்த அவருக்கு 2 மகள் உள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு சமாளிக்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.
கஜேந்திரன் மனைவி பத்மாவதி நேற்று முன்தினம் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை சந்தித்து மருத்துவ உதவி கேட்டு மனு கொடுத்தார்.
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க சென்னையிலுள்ள மருத்துவ மனை உதவிக்கரம் நீட்டியுள்ளது. எனவே அவர் நேற்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்